![]() |
எப்போதும் நண்பர்கள் புடை சூழ ,வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் காணும் அவன் வீட்டிற்கு ஒரே பையன்.ஆனால் பாசத்திற்காக ஏங்கிய நாட்கள் ஏராளம்.அம்மா,அப்பாவின் அன்பு அவனுக்கு எட்டிக்காயாய் கசந்தது. கல்லூரி என்னும் வசந்த காலமும் வந்தது. நண்பர்கள் என்னும் றெக்கையும் முளைத்தது.பறக்க ஆரம்பித்தான் வானத்தில்.ஆனால் இன்னும் அந்த ஏக்கம் தீரவில்லை. அப்போது தான் அவளும் வந்தாள், காதலியாக அல்ல, தங்கையாக.ஆமாம் இவன் வாழ்க்கை சற்று வினோதமானது.இவன் ...
என்னங்க....நம்ம விஸ்வாவுக்கு நாளைக்கு பிறந்தநாள்.அவனுக்கு எதாவது ஸ்பெஷல் கிப்ட் வாங்கிக்கொடு்க்கணும்.என்ன வாங்கி கொடு்க்கலாம்ணு சொல்லுங்களேன்.-செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த தன் கணவன் சுரேஷிடம் கேட்டாள் கமலா. விஸ்வாவுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுண்ணு என்னவிட உனக்குத்தானே நல்லா தெரியும்.அவனுக்கு பிடிச்ச மாதிரி நீயே எதாவது வாங்கி கொடு. நீ என்ன வாங்கி கொடுத்தாலும் அவன் உன் பாசத்த புரிஞ்சுக்கவே போறதில்ல.அப்புறம் உன் விருப்பம்.........சற்று அலட்சியமான குரலில் சொன்னான் ...
மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார். நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது ...
ராம் என்பவர் அலுவலக உதவியாளர் . அவருக்கு வயது சுமார் 55 . அங்கு வேலை செய்பவர்கள் வயது சுமார் 21 லிருந்து 30 வரை இருக்கலாம் . தினமும் அவரை , வா, போ , டீ கொண்டு வா , அது வாங்கி வா , என்று கட்டளையாகவே சொல்வர். அவர் வயதுக்கு மரியாதையை கொடுக்க மாட்டார்கள். நான் மட்டும் ...
“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒருவாரமா மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு கண்ணு தெரியறதில்லையாமா..?” “யாரு சொன்னா..? முந்தாநேத்து அவரு காட்டுலே டிராக்டரு ஓட்டிக்கிட்டு இருந்தாரே..?” “ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு பைத்தியம் புடிச்சிச்ருச்சுன்னு சொல்றாங்க அப்படியா..?” “ஆமாமா..வீட்லேயும் எப்பப் பார்த்தாலும் பொண்டாட்டி,புள்ளைகளோட மல்லுக்கட்டிகிட்டே திரியறாராம்..” “ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடி,ஊருக்குள்ளே வந்தாலும் முக்காடு போட்டுகிட்டுதான் போறாராமா..? “இல்லையே,நம்ம ஊரைத் தாண்டி,நான் பாக்கும்போது,முக்காடு எதுவம் போடலியே..!” கடந்த ஒருவாரமாக,அந்தச்சேரி முழுக்க இப்படித்தான் ...
அப்போ எனக்கு 16 வயசிருக்கும் பாலிடெக்னிக் முதலாமாண்டு முதல் நாளுக்கும் முந்தைய இரவு பிறந்த நாள்முதலாய் உன் முந்தானை பிடித்துக்கொண்டு உன்னையே சுற்றிவந்த உன் ஒரே செல்ல மகன் (நான்) முதன்முதலாய் படிப்பிற்காக உன்னை பிரியவேண்டி வந்தது இத்தனைக்கும் ஒரேமாவட்டதின் கடைசிமூலை காரைக்குடி அதிகபட்சம் 80 கிலோமீட்டர் தொலைவு கூட இருக்காது அதுவே உனக்கும் எனக்கும் செவ்வாய் கிரகமாய் தோன்றியதே அம்மா உனக்கு நெனவிருக்கா ? நீ அப்பாவிடம், ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு நு ஒத்த ...
“இந்தா சுப்ரமணி,இந்த எல்லைக்கல்லுல இருந்துதான் நம்ம சைட்டு. இந்தப்புதரையெல்லாம் வெட்டிக் கிளீன் பண்ணிடு.அப்புறமா அஸ்திவாரத்துக்கு மார்க் பண்ணி,வேலையை ஆரம்பிச்சிடலாம்..”இஞ்சினீயர் சொன்னதற்கு, “சரிங்க” எனத்தலையாட்டிவிட்டு,புதர்களை சுத்தமாக்கத் தொடங்கினான் சுப்ரமணி. சுப்ரமணிக்கு இதுதான் வேலை என்றில்லை.கூலிவேலை எதுவானாலும் செய்துகொண்டிருந்தவன்,கடந்த சில மாதங்களாக இந்த இஞ்சினீயரிடம் சேர்ந்ததிலிருந்து,தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருந்தது.வெறும் தரையாக இருக்கும் இடத்தை சுத்தப்படுத்துவதிலிருந்து தொடங்கி,அங்கு கட்டிடமாக நிமிரும்வரை,மம்பட்டியாள் வேலை,சித்தாள் வேலை என எதுவாக இருந்தாலும்,மறுபேச்சு ...
சாருவிற்கு மனது நொந்து பொய் விட்டது. ஆம் அண்ணனின் இந்த போக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லைதான்... கொஞ்ச நாட்களாக தன் மகள் ஷோபாவுடன் சாருவின் மகன் கண்ணனனுடன் பழகுவதை அண்ணன் குமார் தவிர்ப்பதை எண்ணி சாரு எண்ணி மிகவும் வேதனை அடைந்தாள். சிறுவயதில் ஷோபா கண்ணனுக்குத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் குமாரின் போக்கு இப்படி இருப்பதை எண்ணி எண்ணி பொறுக்கமுடியாமல் ...
மனதின் மறுபக்கம் !!!!!!! சிறுவயதில் ரஜினிகாந்தை போல் கிராப்பு வைத்துக்கொள்ளும் ஆசைகொண்ட மனிதர்களில் நானும் ஒருவன்,படியாத தலையில் எண்ணைவைக்க அம்மா படும் அவஸ்தைகள் ஏராளம்,அம்மா பிரம்பெடுத்து துரத்தும் போதெல்லாம் அரவணைத்து காப்பாற்றுவது என் அப்பாவின் அப்பா துளசிங்கம் தாத்தாதான்,அப்போது எனக்கு தேவையான எல்லாவற்றையும் பூர்த்திசெய்துவைப்பார்,ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சலூன்கடைக்கு அழைத்துச் செல்லும் தாத்தாவிடம் எனக்கு ரஜினிபோல முடிவெட்டிவிட சொல்லி நான் அடம்பிடிக்க '' ...
காலிங்பெல் அழுத்தப்பட்ட சப்தம் கேட்டு கதவைத் திறந்த,சபேசன்.தங்கள் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ராமகிருஷ்ணன் நிற்பதைக் கண்டு குழப்பமானான். முகத்தில் கேள்விக்குறியுடன், இன்றைக்கு என்ன.? என்பதுபோலப் பார்த்தான். தனது கையில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளைக் காண்பித்த ராமகிருஷ்ணன்,சார்,காத்துலே பறந்து கீழே விழுந்தது.யாருதுன்னு தெரியல்லே.அதான் உங்களைக் கேட்டுட்டு,மேல் வீட்டுக்குபோலாம்னு வந்தேன். அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது,செல்போன் ஒலித்தது.அதை எடுத்துப் பேசும்போது,மேல் சட்டைப்பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்திருக்குமோ..?. அவன் தனது சட்டைப்பாக்கெட்டை ...