![]() |
பெண்ணே ! நீ .... என்னை தாண்டி சென்றபோது அசையும் உலகில் அசையாமல் நின்றேன் மற்றவர்கள் என்னைதாண்டிசெல்ல! உன்னை கண்ணடித்த கண்ணுக்குள் உன் முகத்தை பதித்து விட்டாய் ... அது... கண்ணாடி முன்னாடி மட்டுமல்ல என் முன்னாடி யார் வந்தாலும் உன் முகத்தை தான் காட்டுகிறது ! எழுதியவர் :சிவசங்கர்
கேட்பார் அற்று கிடக்கிறது எனது செல்போன் மேசை மீது............. நீ என்னிடம் பேசாத நாட்களில் ........ எழுதியவர் :கவிஞர் : ஜெ.மகேஷ்
"கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தா ... நல்லா இருக்கும்" - கடவுளை பற்றி கமல் சொன்னது ! காதல் தொல்லையென்று சொல்லவில்லை தொலையாமல் ... இருந்தா நல்லா இருக்கும் ! - காதலைபற்றி நான் சொல்வது ! எழுதியவர் :sivasankar
கவிதைக்கும் ஒரு முகமுண்டு அது.... என்னவளின் முகம் ! அவள்... கவிதை எழுதினால் எப்படி இருக்கும் தெரியுமா ...? ஒரு... கவிதை, கவிதை எழுதுவது போல் இருக்கும் ! கவிதையே...! நீ எழுதும் கவிதையில் என்னை ஒரு எழுத்தாகவோ ... ஒரு வார்த்தையாகவோ... அல்லது உன் கவிதைக்கு முற்றுப்புல்லியாகவோ வைத்துவிடு, அதுவே உனக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு தொடக்கபுள்ளி ! எழுதியவர் :சிவசங்கர்
பொள்ளாச்சி அபி அதிகாலைப் பனித்துளியில் தாகம் தீர்த்துக்கொள்ள-தன் கோடிக் கைகளை நீட்டிக் கொண்டிருந்தான் கதிரவன். புள்ளினங்கள் மெதுவே மெதுவே சோம்பல்முறித்தபடி தம் இறக்கைகளை விரித்தபடி சிக்கெடுத்துக் கொண்டிருந்தன. அவற்றின் அமைதியைக் கெடுக்க மனமில்லாமல் ஆடாமல் பார்த்துக் கொண்டன தம் கிளைகளை,மரங்கள். உடல்இளைப்பதற்காக சர்க்கரையைக் குறைப்பதற்காக நடப்பதும்,சிலர் ஓடுவதுமாக பூங்காவில் நிறைந்தது சந்தடி. செய்தித்தாள்கள்,இன்று எங்கும்குண்டு வெடிக்கவில்லை என்றபடி தரைக்கும்,மாடிக்குமாக பறந்து கொண்டிருந்தன. எல்லாம் இயல்பான வகையில் இன்னொரு நாளும் விடிகிறது. வழக்கம்போல் எனது முகமூடிகளைக் காட்டி ஏமாற்றவும்,ஏமாறவும் நானும் கிளம்பிவிட்டேன் என்னிடம் சிரிப்பு,கோபம்,ஆற்றாமை அங்கலாய்ப்பு,வருத்தம் பாசம்,வலி,கேலி,என பலவித முகமூடிகள் உண்டு.., என்ன ஒரு சிரமம் நினைத்தால் உடனே அதைக் கழட்டமுடியாது. அது எப்போதும் என் முகத்தோடுதான் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பார்ப்பவர்கள் சொல்கிறார்கள் அதுதான் என் முகமென்று..!
வெற்றிடத்தில் இருக்கும்போதும் வெட்கப்பட்டு சிரிக்கின்றேன்.... அவள் சினுங்கியதை நினைத்து ! வேண்டாம்.... என்றாலும் வேலை செய்கிறேன் காலையும், மாலையும் "காவலனாக" அவள் செல்லும் பாதையில் ! எழுதியவர் :sivasankar
என்னிடத்தில் விழும் ஒவ்வொரு சாம்பலும் உனது சாம்பலை சேர்க்கிறது .. நான் மட்டும் கரைவதில்லை உன் உயிரும்தான்!!! இதயத்தின் சிறை,தமணி சிறை பிடித்தது நான் விடும் புகையை-ஆனால் மரணதண்டனை மட்டும் எப்படி உனக்கு ? எழுதியவர் :தப்ரேஜ்
தாலாட்டிடும் உன் மடி கேட்கிறேன் - நான் தனி திவுலே வாழ்கிறேன் உன் பார்வையில் -நான் தொலை தூரமா-உன் தோள் சாயவே-உயிர் ஏங்கினேன் ஓர் கல் திண்டிய நீர் குமிழி நானே கரை தொடும் முன்னே கரைகிறேன் எழுதியவர் :கவிஞர் : ஜெ.மகேஷ்
மன்னைபார்த்து நடந்த நீ, என்னை பார்த்து நடந்த நிமிடங்களை என்னை விட்டு பிரியும் இந்த தருணத்தில் கண்களில் கண்ணீர் பெருக வெள்ளை காகிதத்தில் எழுதிவிடாதே - காணாமல் போய்விடும் ; என் இதயத்தில் பொரித்துவிடு - காப்பேன் நான் இறந்த பின்னும் என் கல்லறை கவிதையாக ! எழுதியவர் :சிவசங்கர்
பெண்ணே ! உன் நினைவுகளை கண்ணடித்து, கண்ணடித்து என் காலத்தை வீணடிக்கிறேன் சுமையாக அல்ல சுகமாக ! நான்கு திசைகளையும் என் இரு விழிகளால் பார்க்கின்றேன் நீ வரும் திசை எது என்று வாய் திறந்து உன்னோடு பேச அல்ல மவுனமாய் உன் கண்களோடு பேச...! எழுதியவர் :சிவசங்கர்