![]() |
டாக்டராகவும் பேராசிரியராகவும் இருந்த பெரியவரைச் சந்தித்தாள் ஒரு பெண்மணி. அவரை எப்படி அழைப்பது என்று குழம்பினாள். அவரைப் பார்த்து "உங்களை நான் டாக்டர் என்று அழைக்கவா அல்லது பேராசிரியர் என்று அழைக்கவா? எப்படி அழைத்தால் நன்றாக இருக்கும்?" என்று கேட்டாள். அதற்கு அவர் "என்னைச் சிலர் முட்டாள் என்று கூடத்தான் அழைக்கிறார்கள்" என்றார். "உங்களைப் பற்றி என்னை விட அவர்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கும்" என்றாள் அப்பெண்மணி.
அதே தரம் ஒரு கடையில் எழுதியிருந்த விளம்பரம் : நாங்கள் விற்ற எந்தப் பொருளும் சரியில்லை என்றால் எங்களிடம் திருப்பித் தந்து விடலாம். அதற்குப் பதிலாக அதே தரமுள்ள பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். கட்டிலைத் துறந்தவன் கட்டிலின் மேல் படுத்தபடியே பலர் இறந்து இருக்கின்றனர் என்று கேள்விப்பட்டான் அவன். அன்றிலிருந்து கட்டிலில் படுப்பதை விட்டுவிட்டான் காலண்டர் வாங்கும் காரணம் அவன் 1997 ஆம் ஆண்டு காலண்டர்களை ஆயிரக் கணக்கில் மிகக் ...
புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார். வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்? "ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர். "தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர். "நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர்.
முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊத்திட்டியா? தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.
முதலாளி: என் மேசை மேலே பார்த்தியா? ஒரு மாத தூசி படிந்திருக்கும் போலத் தெரிகிறதே? வேலைக்காரன்: என் மேலே தப்பு இல்லீங்க. நான் வேலைக்குச் சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது.
மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு? கணவன்: நீ தானே "டெய்லி காலண்டர்" வாங்கிட்டு வாங்கனு சொன்னே..! ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க... சோமு: பரவாயில்லையே... நிஜமாகவா..? ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை.. மேனேஜர்: இந்த ஆபிஸூக்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா? வேலையாள்: நீங்க ...
ஒருவன் உயரமான மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தான். அவனை வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர். அங்கு வந்த டாக்டர் அவனைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, "அவன் இறந்து விட்டான்" என்றார். ஆனால் அடிபட்டவனோ தன் கண்ணை விழித்துப் பார்த்து "நான் இறக்கவில்லை டாக்டர், உயிரோடு தான் இருக்கிறேன்" என்றான். அங்கிருந்த அவன் மனைவி, "வாயை மூடுங்கள், டாக்டருக்குத் தெரியாதது உங்களுக்கு என்ன தெரியும்?" என்று அதட்டினாள்.
கடை முதலாளி பார்த்துக் கொண்டிருந்தார். வந்த ஒருவரிடம் "ரொம்ப காலமா இங்கே இல்லீங்க" என்றான் வேலைக்காரன் முதலாளி (பரபரப்புடன்) "எல்லாம் இருக்குங்க. அவன் ஏதோ தெரியாம சொல்றான்" என்றார். வந்தவர் (சிரித்துக் கொண்டே) "இந்த ஊரில் அண்மையில் ஏதாவது மழை பெய்ததா என்று கேட்டேன்" என்றார்.
இரண்டு தச்சர்கள் வீடு கட்டும் வேலையில் இருந்தனர். அவர்களில் ஒருவன் தன் உதவியாளனை அழைத்து "அந்த அறைக்குச் சென்று சுவற்றில் அடிக்கப் பத்து ஆணி கொண்டு வா" என்றான். போன உதவியாளன் திரும்பவே இல்லை. அறைக்குள் கோபத்துடன் நுழைந்த தச்சன், "பத்து ஆணி எடுத்து வர இவ்வளவு நேரமா?" என்று கத்தினான். "நீங்க வலது பக்கச் சுவரிலே அடிக்க ஆணி கேட்டீங்க. இங்கே இருப்பது எல்லாம் ...
முதன் முறையாகத் திரைப்படம் பார்ப்பதற்காக டிக்கட் வாங்கினான் ஒருவன். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு டிக்கட் வாங்கினான். இப்படியே மூன்றாம் முறையும் வந்து ஒரு டிக்கட் வாங்கினான். டிக்கட் கொடுப்பவரால் வியப்பை அடக்க முடியவில்லை. அவனைப் பார்த்து "எதற்காக மீண்டும் மீண்டும் வந்து டிக்கட் வாங்குகிறீர்கள்?" என்று கேட்டார். "நான் ஒவ்வொரு முறையும் படம் பார்க்க உள்ளே நுழையும் போதும் வெளியில் நிற்பவர் என் ...